செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்!…

மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்!…

மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் உடல்களை ஒப்படைத்த கிளர்ச்சியாளர்கள்!… post thumbnail image
கிவ்:-நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பயணிகளுடன் புறப்பட்டு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.இந்த பகுதி கிழக்கு உக்ரைனில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, விமானத்தின் உடைந்த பாகங்கள், அதில் இருந்த 2 கருப்பு பெட்டிகளை மீட்டு கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்து இருந்தனர்.

அதே போன்று விபத்தில் பலியானவர்களின் உடல்களையும், கடத்திச் சென்று ஏர்கண்டிசன் ரெயில் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்து இருந்தனர். அந்த ரெயில் டொனெஸ்ட்க் அருகேயுள்ள டோரஸ் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.அதை தொடர்ந்து சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டிகளையும், மீட்கப்பட்ட விமான பயணிகளின் உடல்களையும் தங்களிடம் ஒப்படைக்கும் படி கிளர்ச்சியாளர்களிடம் மலேசிய அரசு கோரிக்கை விடுத்தது. அதற்கு ரஷியா உதவும்படியும் வேண்டுகோள் விடுத்து இருந்தது.நெதர்லாந்து விசாரணை குழுவினரும் கிளர்ச்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

அவற்றை ஏற்ற கிளர்ச்சியாளர்கள் டொனெஸ்ட்க் நகரில் வைத்து விமானத்தின் உடைந்த பாகங்களில் இருந்து மீட்கப்பட்ட 2 கருப்பு பெட்டிகளை மலேசிய விசாரணை குழுவிடம் நேற்று (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) ஒப்படைத்தனர்.தன்னாட்சி அதிகாரம் படைத்த டொனெஸ்ட்க் மக்கள் குடியரசின் பிரதமர் அலெக்சாண்டர் போரோடாஸிடம் அவற்றை வழங்கினர். அவை இரண்டும் ஆரஞ்ச் நிறத்தில் இருந்தன.அதற்கு மலேசிய அரசு கிளர்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது மலேசியாவின் சொத்து என வர்ணித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்திய பெருங்கடலில் விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டிகளையும் மீட்க முடியவில்லை. தற்போது இந்த விமானத்தின் பெட்டிகள் கிடைத்து விட்டன.அவை சிறிய அளவில்தான் சேதம் அடைந்துள்ளன. ஒரு பெட்டியில் ‘காக்பிட்’ பகுதியில் விமானியின் உரையாடல்கள் அனைத்தும் உள்ளது. மற்றொரு பெட்டியில் விமான பயணம் குறித்த அனைத்து தகவல்களும் உள்ளன. இது எங்களது விசாரணைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விசாரணை குழு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் சுற்றளவுக்கு போர் நிறுத்தம் செய்யவும் டொனேஸ்ட்க் மக்கள் குடியரசு பிரதமர் அலெக்சாண்டர் பரோடாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். அப்பகுதியில் மட்டும் சர்வதேச விசாரணை குழு சென்று பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் கிளர்ச்சியாளர்கள் கடத்தில் வைத்திருந்த விமான பயணிகளின் உடல்களும் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. குளிர்சாதன வசதியுடன் கூடிய ரெயில் பெட்டிகளில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. தொடக்கத்தில் டோரஸ் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது கார்கிவ் நகரில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரெயிலையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர்.மலேசிய விமானத்தை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ‘பக்’ ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. அதை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி