செய்திகள்,விளையாட்டு அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!…

அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!…

அடுத்த உலக கோப்பையை பிரேசில் வெல்லும் – நெய்மார் நம்பிக்கை!… post thumbnail image
ரியோடி ஜெனீரோ:-பிரேசிலில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி அரை இறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது. .கொலம்பியாவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் நெய்மாரை, கொலம்பியா வீரர் ஜூனிகா முழங்காலால் இடித்து தள்ளியதில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு விலகினார்.

நெய்மாரின் வெளியேற்றம் பிரேசில் அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் விளையாடாத இரண்டு ஆட்டத்திலும் பிரேசில் தோல்வியையே தழுவியது. காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் 22 வயதான நெய்மார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எங்களது சிறு வயது கனவாகும். அதனை அடைய முடியாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதனால் தான் நாங்கள் கண்ணீர் விட நேர்ந்தது. நாங்கள் கோப்பையை வெல்ல முயற்சி செய்தோம்.ஆனால் அந்த முயற்சியில் சறுக்கல் ஏற்பட்டு விட்டது. பிரேசில் அணியின் தோல்விக்கு சிறிய விஷயங்களே காரணம். இருப்பினும் அதனை விவரிக்க முடியவில்லை. பிரேசில் கால்பந்து பின்னடைவை சந்தித்து இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட பின்னுக்கு நாங்கள் சென்று விட்டோம். எங்கள் அணி சரிவு கண்டு இருக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். குறிப்பிட்டு சொல்லும் படியான தவறு எதையும் பயிற்சியாளர் செய்யவில்லை.ஆட்ட தந்திரங்கள் குறித்து எனக்கு முழுமையாக தெரியாது. பயிற்சியாளர் லூயிஸ் பெலிப் ஸ்காலரி பிரேசிலின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் ஆவார். அணியின் பயிற்சி இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும். ஐரோப்பிய அணிகளை விட பிரேசிலின் பயிற்சி குறைவாக இருப்பதையே இது காட்டுகிறது.நாம் அதிகம் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கலாம். ஆனாலும் அர்ப்பணிப்புடன் கூடிய அதிக பயிற்சி அவசியமானதாகும். அடுத்த 4 வருடங்களில் (2018) ரஷியாவில் நடைபெறும் போட்டியில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் எங்களது உலக கோப்பை கனவை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது எனக்கு 22 வயது தான் ஆகிறது. திருமணத்தை குறித்து தற்போது நினைத்து பார்க்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி