களஞ்சியத்தின் சமாதான குழுவை விரட்டியடித்த நடிகை அஞ்சலி!…

விளம்பரங்கள்

சென்னை:-எனது ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்காமல் அஞ்சலியை எந்த படத்திலும் நடிக்க விட மாட்டேன் என்று பேசி வந்தார் டைரக்டர் மு.களஞ்சியம். ஆனால், இப்போது பார்த்தால், அவரது எந்த நடவடிக்கைக்கும் பயப்படாமல், தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. அதோடு, சென்னையில் நிரந்தரமாக தங்காமல் மும்பை, கேரளத்து நடிகைகளைப்போன்று ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில், அஞ்சலியை இனி மிரட்டியெல்லாம் நடிக்க வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட களஞ்சியம், இப்போது பணிந்து போகத்தொடங்கி விட்டார். அதனால், அவரை சந்தித்து பேசி வழிக்கு கொண்டு வர தனது அபிமானிகள் சிலரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், அப்படி களஞ்சியம் தரப்பில் இருந்து சந்திக்க வருகிறார்கள் என்றதும் அஞ்சலியின் தற்போதைய செக்யூரிட்டிகள் அவரை நெருங்கவே விடவில்லையாம்.இருப்பினும், தங்களது நிலையை சொல்லி ஒருவழியாக அஞ்சலியை சந்தித்து சமாதானம் செய்யும் வகையில் பேசினார்களாம். ஆனால் அஞ்சலி அதற்கெல்லாம் மசியவில்லையாம்.

அந்த படத்தில் என்னால் நடிக்கவே முடியாது என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மேற்கொண்டு இப்போது நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்று அவர்களை விரட்டியடித்து விட்டாராம் அஞ்சலி.இதனால் சினிமா சங்கங்கள் அனைத்தும் தன்னை கைவிட்டு விட்ட நிலையில், அடுத்து எந்த மாதிரியான முயற்சி எடுப்பது என்பது தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நிற்கிறார் களஞ்சியம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: