செய்திகள்,திரையுலகம் ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்!…

ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்!…

ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படம் இயக்கும் ஜேம்ஸ் வசந்தன்!… post thumbnail image
சென்னை:-சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தற்போது வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். இது முழுக்க முழுக்க ஹாலிவுட் டைப்பிலான மியூசிக்கல் மூவி என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

அவர் மேலும் கூறியதாவது:- பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் இருந்து விட்டால் அதனை இசை காவியம் என்பார்கள் அது தவறு. படத்தில் நடிப்பவர்களே பாடி, ஆடி நடிப்பதோடு இசை தொடர்புடைய படமாக இருந்தால்தான் அதனை மியூசிக்கல் மூவி என்று சொல்வார்கள். இந்த மாதிரி மியூசிக்கல் ஹாலிவுட்டில் அடிக்கடி வரும் தமிழில் இது முதல் முயற்சி.கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளும் அது தொடர்பான போட்டிகள் வெற்றி தோல்விகள், நட்பு, காதல்தான் கதை. ஹீரோ ஹீரோயின் என்ற யாரும் கிடையாது நான்கு இசை குரூப்கள் அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள்தான் திரைக்கதை.

படத்தில் மொத்தம் 19 பாடல்கள். நாட்டுப்புற பாடலில் இருந்து இந்துஸ்தானி, பாப், ஜாஸ் வரைக்கும் வெரைட்டியாக இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக உழைத்து இதற்கான ஸ்கிரிப்படையும், பாடல்களையும் உருவாக்கி இருக்கிறேன். எல்லா பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி