செய்திகள்,திரையுலகம் குத்தாட்ட நடிகையான மீனாட்சி!…

குத்தாட்ட நடிகையான மீனாட்சி!…

குத்தாட்ட நடிகையான மீனாட்சி!… post thumbnail image
சென்னை:-பிங்கி சர்க்கார் என்ற கோல்கட்டா மாடல் அழகி கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சி ஆனார். அதன் பிறகு அகம் புறம், பெருமாள், ராஜாதி ராஜா படங்களில் நடித்தார். அவர் கடைசியாக நடித்தது கரு.பழனியப்பனின் மந்திர புன்னகை. அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் 2 வருட இடைவெளிக்கு பிறகு வந்து ஹீரோயின் வாய்ப்பு தேடினார். ஹீரோயினாக கமிட்டான படம் வில்லங்கம் இன்னும் தொடங்கப்பட வில்லை.

இதனால் குத்தாட்ட நடிகையாக முடிவு செய்து விட்டார். தற்போது எழில் இயக்கி வரும் வெள்ளைக்கார துரை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம்போட்டுக் கொண்டிருக்கிறார். விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கிளைமாக்சிற்கு முன்பு வரும் ஒரு குத்துப்பாடலுக்கு மீனாட்சி ஆடுகிறார்.இதுபற்றி எழில் கூறியிருப்பதாவது: ஒரு பாட்டுக்கு ஆட நம்ம நேட்டிவிட்டி முகம் கொண்ட ஒருவர் தேவைப்பட்டார்.

மீனாட்சி சரியாக இருக்கும் என்றதால் அவரை அணுகினோம் ஒப்புக் கொண்டு ஆடி வருகிறார். ஜில்லா படத்துக்காக போடப்பட்ட ஷெட்டில் சில மாற்றங்களை செய்து அதில் பாடல் காட்சியை படமாக்கி வருகிறோம். இன்னும் ஒரு பாடலை படமாக்கி விட்டால் படம் முடிந்து விடும், வருகிற அக்டோபர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்கிறார் எழில்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி