ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணையும் தமன்னா!…

விளம்பரங்கள்

சென்னை:-சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அழகு ராஜா படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு இப்போது மீண்டும் இவர்கள் இணையவுள்ளனர். இப்படத்தில் ஆர்யா ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஆர்யாவுடன், தமன்னா இணையும் முதல்படம் இதுவாகும்.

ராஜேஷின் வழக்கமான படங்களை போன்று இந்தப்படமும் பக்கா காமெடி படமாக உருவாக இருக்கிறது. ராஜேஷ் படம் என்றால் அதில் சந்தானம் இல்லாமல் இருக்க மாட்டார். இந்தப்படத்திலும் அவர் நடிப்பார் என தெரிகிறது. தற்போது ஆர்யா, புறம்போக்கு, மீகாமன் படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்களை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் ராஜேஷ் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: