செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யை புகழும் ‘கத்தி’ படத்தின் வில்லன்!…

நடிகர் விஜய்யை புகழும் ‘கத்தி’ படத்தின் வில்லன்!…

நடிகர் விஜய்யை புகழும் ‘கத்தி’ படத்தின் வில்லன்!… post thumbnail image
சென்னை:-விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி‘. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார். இவர் இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

நான் இந்தப்படத்தில் அவருடன் மோதவது போல் எந்த சண்டைக்காட்சிகளும் இல்லை, ஆனால் இருவரும் தங்களது புத்திசாலித்தனத்தால் மட்டுமே சண்டையிடவோம் என்று நீல் நிதின் தெரிவித்துள்ளார்.மேலும் விஜய்யுடன் பணியாற்றியது மனதிற்கு மிக சந்தோஷமாக இருந்தது, சூப்பர் ஸ்டார் என்ற எண்ணம் அவர் மனதில் துளியும் இல்லாமல் என்னுடன் எளிமையாக பழகினார் என்றும் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி