செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் கங்குலி!…

கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் கங்குலி!…

கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடும் கங்குலி!… post thumbnail image
கொல்கத்தா:-கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தின் 83–வது வருடாந்திர கூட்டம் வருகிற 27ம் தேதி நடக்கிறது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கொல்கத்தா கிரிக்கெட் சங்க தேர்தலில் குதிக்கிறார்.இணை செயலாளர் பதவியில் இருக்கும் கஜன் முகர்ஜியின் 4 ஆண்டு பதவி காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. அந்த பொறுப்புக்கு கங்குலி போட்டியிடுகிறார்.

இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் கங்குலி டெலிவிசன் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அவரது சார்பில் கொல்கத்தா கிரிக்கெட் சங்க இணை செயலாளர் பதவிக்கு நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. பாரிசா ஸ்போர்ட்டில் கிளப் பிரதிநிதியாக கங்குலி போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் அவர் ஒருமனதாக இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.

வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான ‘காலக்கெடு’ இன்று மாலை 4 மணியுடன் முடிகிறது.
கங்குலியின் பிரவேசம் குறித்து கொல்கத்தா கிரிக்கெட் சங்க தலைவரான டால்மியா கூறும்போது, இது மாதிரியான வீரர்கள் கிரிக்கெட் சங்க நிர்வாகத்துக்கு வருவதை நான் எப்போதும் வரவேற்கிறேன் என்றார். டால்மியா மீண்டும் ஒருமனதாக தலைவராக தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி