செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இளம் நடிகர்களுடன் நடிக்க காத்திருக்கும் நடிகை லட்சுமி ராய்…!

இளம் நடிகர்களுடன் நடிக்க காத்திருக்கும் நடிகை லட்சுமி ராய்…!

இளம் நடிகர்களுடன் நடிக்க காத்திருக்கும் நடிகை லட்சுமி ராய்…! post thumbnail image
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி ராய் லட்சுமி கோவை வந்தார். நிருபரிடம் அவர் கூறியதாவது:– என்னுடைய நிஜ பெயர் ராய். என்னை எல்லோருமே ராய் என்றுதான் அழைப்பார்கள். சினிமாவுக்காக எனக்கு லட்சுமி ராய் என்று பெயர். எனக்கும் என் வீட்டாருக்கும் ராய் என்ற பெயர்தான் பிடிக்கும். நண்பர்கள் பலரும் என்னை ராய் என்றுதான் கூப்பிடுவார்கள். ரசிகர்களுக்கு என்னை எப்படி கூப்பிட பிரியமோ அப்படி அழைக்கலாம்.

நான் நடித்த ‘தாம் தூம்’ , ‘மங்காத்தா’, ‘காஞ்சனா’ ஆகியவை ஹிட் படங்கள். இருந்தாலும் அதிகமாக படம் பண்ண வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. வித்தியாசமான முயற்சியாக ‘ஒன்பதுல குரு’ படத்தில் நடித்தேன். ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறந்த படம், ரசிகர்களுக்கு பிடித்த படம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவே இடைவெளியாக மாறிவிட்டது. இந்த வருடம் அது மாறும். ரசிகர்கள் ஆதரவு இல்லாவிடில் இந்த இடத்தில் நான் நிற்க முடியாது. ஆரம்பத்தில் இருந்த நடிகைகள் இப்போது இல்லை. நான் இருக்கிறேன் என்றால் அது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவுதான்.

அவர்களுக்கு ஏதாவது செய்யாவிட்டால் நான் சுயநலவாதி ஆகி விடுவேன். எனவே நற்பணி செய்கிறேன். சிறு வயது முதலே நற்பணி காரியங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அஜித் சார் படத்தில் நடித்து உள்ளேன். விஜய் சார் எனக்கு நல்ல நண்பர். சில வாய்ப்புகள் அவர் கூட நடிக்க வந்த போதும் சரியான நேரம் அமையவில்லை. அந்த நேரம் வரும் போது அது நிறைவேறும். அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்க ஆசை உண்டு. நல்ல கதை அமைந்தால் எல்லா புது இயக்குனர்கள், புது நடிகர்கள், இளம் நடிகர்களுடன் நடிக்க காத்திருக்கிறேன்.

மாதம் ஒரு முறை அல்லது வாய்ப்பு கிடைக்கும் போது என் பிறந்த நாளில் ரசிகர்களை சந்திக்கிறேன். அவர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. தமிழில் ‘இரும்புக்குதிரை’, ‘அரண்மனை’, மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘ராஜாதி ராஜா’ கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி