உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர்!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி உள்ளிட்டோர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாமல் போயிருக்கலாம்.

ஆனால் உலக கோப்பை போட்டியின் போது, ‘கூகுள்’ இணையதளத்தில் ரசிகர்களால் ஆர்வமுடன் அதிகமாக தேடப்பட்ட வீரர்களின் பட்டியலில் இவர்கள் தான் முன்னணியில் இருந்துள்ளனர். மேலும், உலக கோப்பை தொடர்பான செய்திகள், படங்கள் தேடல் 200 கோடி முறைக்கு மேலாக நடந்துள்ளது.

பெல்ஜியத்திற்கு எதிரான ஒரே ஆட்டத்தில் 15 முறை கோல் வாய்ப்புகளை முறியடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அமெரிக்க கோல் கீப்பர் டிம் ஹோவர்ட், அதிகமாக தேடப்பட்ட கோல் கீப்பர் ஆவார். மேற்கண்ட தகவல் கூகுள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: