செய்திகள்,திரையுலகம் ‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை துறந்தார் சிம்பு!…

‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை துறந்தார் சிம்பு!…

‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை துறந்தார் சிம்பு!… post thumbnail image
சென்னை:-சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானபோது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டார். கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சேர்ந்தது. படங்களில் அவரது பெயருக்கு முன் இந்த பட்டம் சேர்க்கப்பட்டது. ரசிகர்களும் ‘யங் சூப்பர் ஸ்டார் சிம்பு’ என்றே போஸ்டர்கள் ஒட்டினர். சிம்புவும் இந்த பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் தற்போது அப்பட்டத்தை துறக்க முடிவு செய்துள்ளார். சமீபகாலமாக ஆன்மீக பணிகளில் அவர் தீவிரம் காட்டுகிறார். இதனால் அவரது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவே பட்டத்தை துறக்க காரணம் என கூறப்படுகிறது.பட்டத்தை துறப்பது குறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தேவையற்ற சுமையாக கருதுகிறேன். இந்த சுமையை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளேன். என் திரை வாழ்வில் நான் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளேன். என்னுடைய இமேஜ், அது என் ரசிகர்கள் இடையே ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமென உணர்ந்து வருகிறேன்.

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில் முக்கியத்துவம் இல்லாத பட்டங்கள் வளரும் கலைஞனுக்கு அவசியமற்றது என கருத ஆரம்பித்து இருக்கிறேன். திரையில் என் மீது அன்பு கொண்டவர்களை தாண்டி எல்லோருடைய அன்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.பட்டம் துறப்பது என்ற என்னுடைய இந்த முடிவு அதற்காக முதல் வழியாகும். என்னுடன் என்றென்றும் இருக்கும் இருக்கப்போகும் என் இனிய ரசிகர்கள் இந்த முடிவை ஏற்று ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி