செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!…

எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!…

எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!… post thumbnail image
நியூயார்க்:-உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து கடந்த 2013-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு குறித்து ஐ.நா. சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் எய்ட்சுக்கு காரணமாக எச்.ஐ.வி. கிருமி தொற்று உள்ளவர்கள் வரிசையில் சப் சஹாரா ஆப்பிரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயால் 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேரில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் 36 சதவீதம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும், 51 சதவீதம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவதாகவும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது. புதிதாக நோய் தாக்குவோர் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்ந்து உள்ளது.பாலியல் தொழிலாளர்கள் மூலமாக நோய் பரவும் சதவீதம் 10.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்து இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி