செய்திகள்,திரையுலகம் அஜித் வேடத்தில் நடிக்கும் சல்மான் கான்!…

அஜித் வேடத்தில் நடிக்கும் சல்மான் கான்!…

அஜித் வேடத்தில் நடிக்கும் சல்மான் கான்!… post thumbnail image
சென்னை:-அஜித் நடித்து வெற்றியடைந்த வீரம் படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்கிறார்கள். தமிழில் அஜித் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவே ஹிந்தி ரீ-மேக்கையும் இயக்குகிறார். ஐந்து அண்ணன் – தம்பிகள் பற்றிய இக்கதையில் சல்மான் கானின் தம்பிகளாக அவரது நிஜ தம்பிகளான ஆர்ஃபான் கான், சோஹில் கான் இருவரும் நடிக்க இருக்கிறார்கள்.

போக்கிரி, காவலன் உட்பட ஏற்கெனவே சில தமிழ்ப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது அவற்றில் சல்மான்கான்தான் நடித்தார். அப்படங்கள் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்ததால், தென்னிந்திய மொழிப் படங்களின் ரீ-மேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சல்மான்.
வீரம் படத்தை ஹிந்தியில் இயக்குவதற்கு சிவா கமிட்டாகிவிட்டாலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் துவங்குகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி