லிங்காவில் ரஜினியுடன் இணையும் பிரபு!…

விளம்பரங்கள்

சென்னை:-ரஜினி நடித்து வரும் படம் லிங்கா. அவருடன் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, தேவ் கில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்போது இந்த அணியில் பிரபுவும் சேர்ந்திருக்கிறார். பிரபுவும் ரஜினியும் இணைந்து நடித்த குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், சந்திரமுகி படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த சென்டிமென்டின் அடிப்படையில் பிரபு நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினி கருத்து சொன்னதாகவும், அவருக்காகவே ஒரு கேரக்டர் உருவாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் லிங்கா படப்பிடிப்பில் பிரபு கலந்து கொள்ள இருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: