செய்திகள்,திரையுலகம் கமலுக்கு பி.ஆர்.ஓ. ஆனார் சித்ரா லட்சுமணன்!…

கமலுக்கு பி.ஆர்.ஓ. ஆனார் சித்ரா லட்சுமணன்!…

கமலுக்கு பி.ஆர்.ஓ. ஆனார் சித்ரா லட்சுமணன்!… post thumbnail image
சென்னை:-இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ.,வாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்கிறார்.சுமார் 35 வருடங்களுக்கு முன்பு பத்திரிகையாளராக இருந்தவர் சித்ராலட்சுமணன். அன்று முதல் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருக்கிறார். அது மட்டுமல்ல இவர் ஆரம்ப நாட்களில் கமல்ஹாசனுக்கு பி.ஆர்.ஓ வாகவும் பணியாற்றி வந்தார்.

பின்னர் தயாரிப்பாளராக உயர்ந்த சித்ரா லட்சுமணன், கமல்ஹாசன் நடிக்க சூரசம்ஹாரம் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தார். பல வருடங்களுக்கு கமல்ஹாசனுக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்த சித்ராலட்சுமணன் உத்தம வில்லன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ வாக நடிக்கிறார்.உத்தமவில்லன் படத்தில் கமல் ஏற்றுள்ள இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவற்றில் ஒரு வேடம் திரைப்பட நடிகர். கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா இயக்குநர் கே விஸ்வநாத், கே பாலசந்தர் ஆகியோரோடு இவர் நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி