செய்திகள்,திரையுலகம் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறை!…

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறை!…

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகைக்கு 18 ஆண்டு சிறை!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள புதுபாஸ்டன் நகரில் வசித்து வந்தவர் நடிகை ஷனான் கெஸ் ரிச்சர்டுசன் (வயது 36). இவர் டி.வி. தொடர்களில் நடித்துள்ளார்.இவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கில் மேயராக இருந்த மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோருக்கு ரிசின் என்ற கொடிய விஷத்தை தடவி கடந்த ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விஷத்தை தான் வைத்திருந்ததை கோர்ட்டு விசாரணையில் நடிகை ஷனான் கடந்த டிசம்பர் மாதம் ஒப்புக்கொண்டார்.

ஆனால் விஷம் தடவிய கடிதங்களை தனது முன்னாள் கணவர்தான் அனுப்பினார் என்று வாதிட்டார். ஆனால் அது பொய் என தெரிய வந்தது. இதையடுத்து நடிகை ஷனானுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டெக்காஸ் கிழக்கு மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. 3 லட்சத்து 67 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி