செய்திகள்,திரையுலகம் ஐஸ்வர்யாவுக்கு இணையாக ஆட முடியாமல் தடுமாறிய நடிகர் தினேஷ்!…

ஐஸ்வர்யாவுக்கு இணையாக ஆட முடியாமல் தடுமாறிய நடிகர் தினேஷ்!…

ஐஸ்வர்யாவுக்கு இணையாக ஆட முடியாமல் தடுமாறிய நடிகர் தினேஷ்!… post thumbnail image
சென்னை:-அட்டகத்தி தினேஷ் தற்போது நடித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படத்தில் ஒரு குத்துப்பாடலில் விஜய் சேதுபதி ஆடிவிட்டார். ஆனால் இரண்டு டூயட் பாடல்களில் தினேஷ் ஆடியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் டிவியின் நடன நிகழ்ச்சியில் சீசன் 3யில் வெற்றி பெற்ற ஜோடியில் இடம்பெற்றவர்.

அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட நடன அசைவுகளை அற்புதமாக கொடுத்துள்ளார். ஆனால், தினேஷோ, அந்த பாடல்களில் அவருடன் நடனமாட முடியாமல் திக்கித் திணறிப்போனவர். ஒரு கட்டத்தில் கண்டபடி தனது இஷ்டத்துக்கு ஆடினாராம். அவரிடம் இருக்கும் நடன திறமை அவ்வளவுதான் என்பதை தெரிந்த இயக்குனரும், பின்னர் அவரால் என்ன முடிகிறதோ அதை செய்யட்டும் என்று நடன மாஸ்டரிடம் சொல்லி விடடாராம்.

அதனால், பின்னர் ஐஸ்வர்யாவை மட்டுமே முக்கிய அசைவுகளில் ஆட வைத்து, தினேஷை வேகமாக நடப்பது, ஓடுவது போன்று சில ஷாட்களை படமாக்கினர்களாம். ஆனால் இந்த நிலை இனி படத்துக்குப்படம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தீவிர நடன பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம் தினேஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி