திரைப்பட இயக்குனர் கவி காளிதாஸ் திடீர் மரணம்!…

விளம்பரங்கள்

சென்னை:-ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (வயது 45). திரைப்பட இயக்குனர். கவிகாளிதாஸ் நடிகர் அஜீத் நடித்த ‘உன்னைக்கொடு என்னை தருவேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் திரைப்பட இயக்குனர் பாக்யராஜிடம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சித்து பிளஸ்-2, பாரிஜாதம், சொக்கத்தங்கம்’ போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘பீமாபுரம் பெல்லாடு’ என்ற படத்திற்கு கதை வசனமும் எழுதி உள்ளார். கடந்த சில நாட்களாக கவிகாளிதாஸ் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை.இந்தநிலையில் நேற்று பகல் 2¾ மணி அளவில் கவிகாளிதாசின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு பிரியா (25) என்ற மனைவியும், 3½ வயதில் அமிர்தா என்ற குழந்தையும் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: