செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 425 – திரையரங்குகளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி…!

425 – திரையரங்குகளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி…!

425 – திரையரங்குகளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி…! post thumbnail image
தனுஷ் தயாரித்து, நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படம் தனுஷுக்கு 25-வது படம். இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக், சுரபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், வருகிற 18-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் சுமார் 425 திரையரங்குகளில் இப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் வெளியிடுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி