வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…

விளம்பரங்கள்

சென்னை:-பாடலாசிரியர் வைரமுத்து தனது 60வது பிறந்த நாளை கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருவிழாவாக கொண்டாடினார். இதன் கடைசி பகுதியாக திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் கலந்து கொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது.

இதில் பேசிய பாரதிராஜா ‘வைரமுத்து என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தவன். பெரிய திமிர் அவனுக்கு என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தபோது என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு முடிந்தால் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றான். உன் புத்தகத்தை விமானத்தில் படித்தேன் என்றேன். உயர்ந்த விஷயத்தை உயர்ந்த இடத்தில் இருந்துதான் படிக்க முடியும் என்றான். எனக்கு அவன் தண்ணி வண்டி என்று பட்டப் பெயர் வச்சிருந்தான்’ என்றார் பாரதிராஜா.பின்னர் இதற்கு பதிலளித்து வைரமுத்து பேசியதாவது: என்னை திமிர் பிடித்தவன் என்பதா? என்னைவிட எளிமையானவர்கள் உண்டா? தன்னம்பிக்கைக்கு திமிர் என்று பெயர் வைப்பதா? உங்கள் படத்தில் எல்லாம் மாறியிருக்கிறது திரைப்பாட்டு மொழியைத் தவிர. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அதை மாற்றிக் காட்டுகிறேன் என்றுதான் பாரதிராஜாவிடம் சொன்னேன்.

என்னை இளையராஜாவிடம அறிமுகப்படுத்தியபோது அவரை வாடா போடா என்று உரிமையோடு பேசினார். அந்த வாடா போடா உரிமையை வேலையிலும் பயன்படுத்துவது தவறு. அறையில் பயன்படுத்தினால் அன்பு. வேலையில் பயன்படுத்தினால் வம்பு.இவ்வாறு வைரமுத்து பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் வந்து மைக்கை பிடுங்கி பேசிய பாரதிராஜா ‘உங்களைப்போல தமிழில் பேச என்னால் முடியாது, நான் பாமரன். எனக்கு தெரிந்த உண்மையை சொன்னேன். அவ்வளவுதான். வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அரங்கை விட்டு வெளியேறினார்.இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: