செய்திகள்,திரையுலகம் விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…

விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…

விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!… post thumbnail image
சென்னை:-நடிகை சமந்தா தெலுங்கில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவர்.தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் வேறு ஹீரோயின் இல்லை. சமந்தா மட்டுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிலும் இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத அளவுக்கு கிளாமர் குயினாகவும் நடித்துள்ளார்.

இந்த படங்களில் விஜய்யுடன் நடித்துள்ள கத்தி படத்தை பெரிய அளவில் தான் எதிர்பார்ப்பதாக கூறி வருகிறார். காரணம், இந்த படத்தில் சமந்தாவை வெறும் டூயட்டுக்கு மட்டுமே பயன்படுத்தாத ஏ.ஆர்.முருகதாஸ், ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனை யூஸ் பண்ணியதுபோல் சமந்தாவின் கேரக்டருக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். அதனால், இந்த கத்தி படம் தமிழில் எனக்கு பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார் சமந்தா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி