அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு… post thumbnail image
போர்ட் லிஸா:-பிரேசிலில் உள்ள போர்ட் லிஸா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அப்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.இந்த சந்திப்பு நேற்று இரவு நடந்தது. ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு சந்திப்பதாக இருந்தது. ஆனால் பிரேசிலியாவில் நடந்த ஒரு விழாவில் புதின் பங்கேற்க சென்றுவிட்டதால் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று நடந்த சந்திப்பின் போது பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமரான மோடிக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். அதற்காக அவருக்கு பிரதமர் மோடி நன்றி கூறினார்.பின்னர் அவருடன் இந்தியில் பேசினார். அப்போது இந்தியாவின் சிறந்த நண்பன் யார் என்ற எந்த ஒரு இந்திய குழந்தையிடம் கேட்டாலும் அது ரஷியா என பளிச்சென்று பதில் சொல்லும். அந்த அளவுக்கு இந்தியா பிரச்சினைகளில் இருந்தபோது ரஷியா உதவி செய்துள்ளது.அணு பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ரஷியாவுடன் இந்தியா மேலும் நட்புறவை விரிவுபடுத்த விரும்புகிறது என்றார். மேலும் அவர் கூறும்போது மேற்படிப்புக்காக ரஷியா வருகை தரும் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த புதின், அது குறித்து கவனிக்கப்படும் என்றார். மேலும் வருகிற டிசம்பர் மாதம் கூடங்குளம் 2–வது திட்டம் குறித்து பேச்சு நடத்த வருகை தரும் புதின் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.அது ஒரு நல்ல யோசனை என புதின் பதில் அளித்தார். அப்போது குஜராத் முதல்– மந்திரி ஆக இருந்தபோது தான் ரஷியாவில் உள்ள அவுட்ராகன் பகுதிக்கு வந்ததையும் அப்போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் புதினுக்கு மோடி நினைவுபடுத்தினார்.அப்போது புதின் தான் இந்தியாவில் இருப்பது போன்று உணர்ந்ததாக பதில் அளித்தார். பிரிக்ஸ் மாநாட்டில் புதின் ஆற்றிய உரையை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டினார். குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் குறித்து பேசியதற்கு பாராட்டு தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி