செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் காட்டிய அதிரடி…!

திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் காட்டிய அதிரடி…!

திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் காட்டிய அதிரடி…! post thumbnail image
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஷால் காரைக்குடியிலேயே முகாமிட்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் கேபிள் சேனல்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்களை திருட்டுத்தனமான ஒளிபரப்புவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்தது.

அவை இரண்டுமே தனது படங்கள் இல்லாவிட்டாலும், சினிமா துறையில் தான் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையிலும், சினிமாவில் நுழைந்துள்ள திருட்டு விசிடியின் கோரத்தாண்டவத்தை தட்டிக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்திலும், காரைக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, போலீசாருடன் நேராக சம்பந்தப்பட்ட லோக்கல் கேபிள் சேனல்களுக்கு நேரடி விசிட் அடித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரைக்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் சேனல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவுமாறு பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி