டெல்லியில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-கடந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் பிடித்தது.தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான பலம் கிடைக்காததால் பா.ஜ.க ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் சில மாதங்களிலேயே லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய காங்கிரஸ் அரசுடன் ஏற்பட்ட மோதலில் அவர் பதவி விலகினார்.

இதனால் சட்டமன்றம் குடியரசுத் தலைவரால் முடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அங்கு பா.ஜ.க ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டுக்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி டெல்லி திரும்பியவுடன் அவருடன் கலந்தோசித்து விட்டு இதற்கான நடவடிக்கைகளில் இறங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. அக்கட்சி சார்பில் மூத்த உறுப்பினரான ஜகதீஷ் முக்கி முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப் படலாம் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: