செய்திகள்,திரையுலகம் சுதந்திர தினத்தில் வெளியாகும் சிங்கம் ரிட்டர்ன்ஸ்!…

சுதந்திர தினத்தில் வெளியாகும் சிங்கம் ரிட்டர்ன்ஸ்!…

சுதந்திர தினத்தில் வெளியாகும் சிங்கம் ரிட்டர்ன்ஸ்!… post thumbnail image
மும்பை:-ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான சிங்கம், இந்தியில் அதே பெயரில் 2011ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து அதே ஹரி, சூர்யா காமினேஷனில் வெளிவந்து ஹிட்டான சிங்கம் 2 இப்போது இந்தியில் சிங்கம் ரிட்டர்ன் என்ற பெரியல் ரீமேக் ஆகிறது. இதில் அஜய்தேவ்கான், கரீனா கபூர் நடித்து வருகிறார்கள். ரோகித் ஷெட்டி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடபட்டு லைக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறது. படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். காக்கி சீருடை அணிந்தவர்களைப்போல பொதுமக்களும் தேச பற்றுடன் நடந்து கொண்டால் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக பொருள். சிங்கம் ரிட்டன்ஸ் டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அஜய் தேவ்கன் டுவிட்டரில் எழுதியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி