அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!… post thumbnail image
போர்ட்டலசா:-பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த அமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆகும். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் போர்ட்டலசா நகரில் இன்று நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் அங்கு சென்றார். அவருடன் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங், நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் ஆகியோரும் சென்றுள்ளனர்.

அங்கு, சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு 80 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சந்திப்பின்போது எல்லைப்பிரச்சனைக்கு தீர்வு காண சீனாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சந்திப்பின்போது எல்லையில் அமைதியை பராமரிப்பது மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தும் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியா-சீனா நட்புடன் எல்லை பிரச்சனைக்கு தீர்வுகாண்டால் இது உலகிற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்துள்ளார். மோடியையும் சீனா அந்நாட்டிற்கு வர அழைப்பு விடுத்துள்ளது.

சீனா அதிபர் செப்டம்பர் மாதத்தில் இந்தியா வரலாம் என்றும் நவம்பர் மாதம் மோடி சீனா செல்லாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பா.ஜனதா அரசு பதவியேற்பு விழாவிற்கு சீன அதிகாரிகள் கலந்து கொண்டதற்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி