செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!…

உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!…

உணவில் கிருமிகள் இருக்கிறதா என்பதை அளவிடும் கருவி கண்டுபிடிப்பு!… post thumbnail image
தென் கொரியா:-தென் கொரியா நாட்டின் சியோல் நகரில் செயல்படும் ‘பயோசென்சார்’ நிறுவனம் பெங்குயின் வடிவில் ஒரு எலெக்ட்ரானிக் கருவியை அறிமுகம் செய்துள்ளது. நாம் சாப்பிட இருக்கும் இறைச்சியின் ஒரு துளி சாற்றை கசக்கி எடுத்து கருவியில் உள்ள சிறு குப்பியில் வைத்தால் போதும், 2 நிமிடங்களில் அந்த இறைச்சியில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் இருக்கிறதா?, உணவு கழகம் அனுமதிக்கும் அளவை விட அதிகமாக தொற்றுக் கிருமிகள் உள்ளனவா? என்பதை காட்டிவிடும். இதனால் நாம் தீமை தரும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து நலம் பெறலாம்.

‘பெங்குயின் பயோசென்சார் சொல்யூசன்’ கருவி 10 பிபிபீ என்ற அளவில் கிருமிகளை துல்லியமாக அளவிடக் கொடியது. இது பற்றி அதன் தயாரிப்பாளர்கள் கூறுகையில், அமெரிக்காவில் ஆண்டு தோறும் 20 லட்சம் பேர் இது போன்ற கிருமிகள் தாக்குதலுக்கு பாதிக்கபடுகிறார்கள். அவர்களில் 23 ஆயிரம் பேர் மரணம் அடைகிறார்கள். உலகம் முழுவதும் கூட இது போன்ற கிருமி தாக்குதலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. பெரும்பாலும் இறைச்சியில் உள்ள கிருமிகளால்தான் இந்த தாக்குதல்கள் நிகழ்கின்றன. பெங்குயின் சென்சார் கருவி இதை தடுக்கும் சிறந்த சாதனமாக விளங்கும் என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி