நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளை புகழ்ந்து அவ்வப்போது பாடல்கள் வெளிவருதுண்டு. ஸ்ரீதேவி உச்சத்தில் இருக்கும்போது, ‘வாழ்வே மாயம்’ படத்தில் “தேவி ஸ்ரீதேதி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா…” என்ற பாட்டு இடம்பெற்றது. இதனை கமல் ஸ்ரீதேவியை பார்த்து பாடுவார்.நதியா உச்சத்தில் இருந்தபோது “நதியா நதியா இது நைல் நதியா…” என்ற பாடல் வெளிவந்தது. குஷ்பு உச்சத்தில் இருந்தபோது அண்ணாமலை படத்தில் “கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழப்பூ கூடையில் என்ன பூ குஷ்பு…” என்று வைரமுத்து பாடல் எழுதினார். அதே வைரமுத்து இப்போது உச்சத்தில் இருக்கும் நயன்தாராவை பற்றி பாடல் எழுதியிருக்கிறார்.

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
நாலைந்து பேர்கள் பின்னாடி அலைந்தாரா
நான்தானா உன் ஜோடி என்று பயந்தாரா…
என்கிற பல்லவியோடு அந்த பாடல் தொடங்குகிறது.

அதாவது ஊரில் உள்ளவர்கள் எல்லாம் நயன்தாராவை பார்த்து வியந்து போகிறார்கள், அனைவரும் காதல் சொல்லி வழிந்தார்கள் (நயந்தாரா என்பதன் லோக்கல் மீனிங்), அவர் பின்னால் நான்கைந்து பேர் (சிம்பு, பிரபுதேவா, ஆர்யா) அலைந்தார்கள். அவர்கள் உன் ஜோடியாக இருக்கவே பயந்தார்கள். என்ற பொருள். (கவிஞர் வேறு பொருள் சொல்லலாம்).இந்தப் பாடல் உதயநிதி நடிக்கும் நண்பேண்டா படத்தில் இடம் பெறுகிறது. உதயநிதி நயன்தாராவை பார்த்து பாடுவதாக பாடல் காட்சி இருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: