செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!…

தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!…

தென் அமெரிக்க கண்டத்தில் வெற்றி பெற்று புதிய சகாப்தம் படைத்த ஜெர்மனி!… post thumbnail image
பிரேசிலா:-தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்தது.தென் அமெரிக்காவில் இதற்கு முன்பு 4 உலக கோப்பை போட்டி நடந்துள்ளது.

1930–ல் உருகுவேயில் நடந்த போட்டியில் உருகுவேயும், 1950–ல் பிரேசிலில் நடந்த போட்டியில் உருகுவேயும், 1962–ல் சிலியில் நடந்த போட்டியில் பிரேசிலும், 1978–ல் அர்ஜென்டினாவில் நடந்த போட்டியில் அர்ஜென்டினாவும் சாம்பியன் பட்டம் பெற்றன. பட்டம் வென்ற இந்த நாடுகள் அனைத்தும் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ளவையாகும்.தற்போது 5–வது முறையாக தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் நடந்த போட்டியில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி பட்டம் பெற்றது. இதன் மூலம் அந்த அணி புதிய சகாப்தம் படைத்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி