செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் பற்றி ஒரு ஹைலைட்ஸ்!…

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் பற்றி ஒரு ஹைலைட்ஸ்!…

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் பற்றி ஒரு ஹைலைட்ஸ்!… post thumbnail image
நடிகர் சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாளிலேயே சுமார் 10 லட்சம் பேர் இந்த டீசர் ரசித்துள்ளனர். இம்மாதம் ஆடியோ ரிலீஸ் நடக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இப்படம் பற்றிய சிறப்பு விஷயங்களை இங்கு பார்ப்போம்.

* அஞ்சான் படத்தில் சூர்யா, ராஜூபாய், கிருஷ்ணா என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒருவேடம் தாதா கேரக்டர்.

* அஞ்சான் படம் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கிறது. காக்க காக்க, சிங்கம், சிங்கம்-2 படங்களை காட்டிலும் சூர்யாவின் ஆக்ஷ்ன் இதில் பெரிதும் பேசப்படும்.

* அஞ்சான் படம் 100 சதவீதம் மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் ஜூன் வரை சூர்யா கால்ஷீட் மொத்தத்தையும் அஞ்சான் படத்திற்கு கொடுத்து நடித்து முடித்துள்ளார்.

* இயக்குனர் லிங்குசாமி ஒரு ரசிகராக இருந்து, சூர்யாவின் ஒவ்வொரு சீனையும் செதுக்கியுள்ளார். 4 முறை சந்திப்பிற்கு பிறகு 15 நாளில் கதை ரெடி பண்ணி, 1 வாரத்தில் சூர்யாவிடம், அடம் பிடித்து கால்ஷீட் வாங்கி அஞ்சானை உருவாகியிருக்கிறார்.

* செல்வா மாஸ்டரின் சண்டைக்காட்சி படத்தில் மிரட்டலாக இருக்குமாம். குறிப்பாக கயிறு கட்டி எடுத்த பைட் சீன் ரொம்ப சூப்பராக வந்திருக்காம்.

* யுவன் இசையில் 3 மணி நேரத்தில் சூர்யா பாடியிருக்கும் ஏக் தோ தீன் கத்துகோடி பாட்டு கேட்பவரை ஆட வைக்குமாம்.

* வேட்டை படத்துக்கு பிறகு பிருந்தா சாரதி இந்த படத்துக்கு லிங்குசாமியுடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார். படத்தில் சூர்யா பேசும் வசனங்கள் அனல் பறக்க இருக்குமாம். அதில் ஒன்று, நான் சாகணும்ன்னா அதை நான் தான் முடிவு பண்ணனும், நீ சாகணுன்னாலும் அதையும் நான் தான் முடிவு பண்ணனும்… என்ற வசனமும், சின்ன வேட்டு சத்தம் கேட்டு பறந்து போக நான் புறா இல்லடா… நின்னு நிதானமா இரையை தூக்கிட்டு போற கழுகுடா… என்ற வசனத்துக்கும் விசில் பறக்கும் என்கின்றனர்.

* மும்பை – கோவா பகுதிகளில் சந்தோஷ் சிவன் படமாக்கிய காட்சிகள் கண்ணுக்கு விருந்து கொடுக்குமாம். இந்தியாவிலேயே முதல் முறையாக ரெட் டிராகன் என்ற
கேமராவை பயன்படுத்தி உள்ளனர்.

* சூர்யாவின் மெனகெடல் இந்த படத்திற்கு அதிகம், இதை தாண்டி வேறு எதையும் அவர் யோசித்தது இல்லை. ராஜூ பாயாக படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார் என்கிறார் இயக்குனர்.

* கஜினிக்கு பிறகு அஞ்சான் ஸ்டைல் பெரிதும் பேசப்படுமாம். மன்சூர் என்ற பாம்பே மேக்கப் மேனின் கை வண்ணம் விளையாடியிருக்காம்.

* சமந்தா இந்த படத்தில் கமிஷனர் மகளாக ஜீவா என்ற ரோலில் நடித்திருக்கிறார். படத்தில் சூர்யா-சமந்தா ஜோடி அவ்ளோ சூப்பரா வந்திருக்காம்.

* படத்தில் வில்லனாக மனோஜ் பாஜ்பாய் மற்றும் திலீப் தாகில் என இரு வில்லன்கள் நடித்துள்ளனர். சூர்யாவோடு இவர்கள் மோதும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக வந்திருக்காம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி