செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்!…

‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்!…

‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்!… post thumbnail image
இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் டேவிட் லெஜெனோ (50). இவர் மிகவும் பிரபலமான ‘ஹாரிபாட்டர்’ படத்தில் பெனிர் கிரே பேக் என்ற கேரக்டரில் ஓநாய் மனிதனாக நடித்து புகழ் பெற்றவர். இவர் ஹாரி பாட்டர் படத்தின் 3 பாகங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் இவர் அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தில் மரண பள்ளத்தாக்கு எனப்படும் ‘டெத்வேலி’ பகுதியில் உள்ள பாலைவனத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் ஹெலிகாப்டரில் சென்று அவரது பிணத்தை மீட்டு வந்தனர். அவர் ஏன் அங்கு சென்றார். எப்படி இறந்தார் என தெரியவில்லை. தொடக்க விசாரணையில் அவர் பாலைவன பகுதியில் நீண்ட தூரம் நடை பயணம் சென்றுள்ளார்.

அப்போது பாலைவனத்தின் கடுமையான வெப்பம் தாங்காமல் அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. இருந்தாலும் அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.மிகவும் உயரமான திடகாத்திரமான உடல் அமைப்பை கொண்ட டேவிட் லெஜெனோ நடிகராவதற்கு முன்பு தொழில் ரீதியாக குத்து சண்டை வீரர் ஆக இருந்தார். தற்போது இவர் ஸ்வர்டு ஆப் வெஞ்சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி