செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மேற்கு வங்காளத்தில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் விபத்திலிருந்து தப்பித்தன!…

மேற்கு வங்காளத்தில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் விபத்திலிருந்து தப்பித்தன!…

மேற்கு வங்காளத்தில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் விபத்திலிருந்து தப்பித்தன!… post thumbnail image
புதுடெல்லி:-மேற்கு வங்காளத்தில் உள்ள பக்டோக்ரா விமான நிலையத்தை நோக்கி நேற்று நண்பகலில் 120 பயணிகளுடன் ஏர் இந்தியா-879 என்ற விமானம் கீழிறங்கிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் டெல்லி செல்லும் இண்டிகோ விமானமும் விமான நிலையத்திலிருந்து புறப்பட விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த விமானத்திலும் 130 பயணிகள் பயணம் செய்தனர். இரு விமானங்களுக்கும் 30000 அடி உயரத்தில் பறப்பதற்கான அனுமதி ஒரே சமயத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி வழங்கப்பட்டது. இரு விமானங்களும் நடுவானில் 1000 மீட்டர் உயர இடைவெளியில் பறந்த போது விமானிகள் இருவரும் உஷாராகிவிட்டனர்.

அப்போது இண்டிகோ விமானத்தின் விமானிக்கு போக்குவரத்து மோதல் தவிர்ப்பு கருவியில் இருந்து விமானிக்கு ஆலோசனை கிடைத்தது. உடனடியாக தனக்கு கிடைத்த ஆலோசனையின் படி விமானத்தை அவர் கீழிறக்கினார். அதே சமயத்தில் ஏர்-இண்டியா விமானத்தின் விமானிக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர் அந்த விமானத்தை வலது புறமாக திருப்பினார்.இதனால் நூலிழையில் விமானங்கள் இரண்டும் விபத்தில் இருந்து தப்பின. இந்த இரு விமானங்களிலும் 250 பயணிகள் இருந்தனர். விபத்து தவிர்க்கபட்டதால் பயணிகள் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி