செய்திகள்,திரையுலகம் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகள் நர்மதா நடிக்க வருகிறார்!…

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகள் நர்மதா நடிக்க வருகிறார்!…

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகள் நர்மதா நடிக்க வருகிறார்!… post thumbnail image
மும்பை:-தனது நடனத்தாலும், நடிப்பாலும் இந்தித் திரையுலக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் கோவிந்தா. அனில் கபூர் மகள் சோனம் கபூர், சத்ருக்கன் சின்ஹா மகள் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முன்னணி ஹீரோயின்களாக ஏற்கெனவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு வாரிசு நடிகை இந்தித் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

பிரபல பஞ்சாபி நடிகரான ஜிப்பி கிரேவல் அறிமுகமாகும் இந்திப் படத்தில்தான் நர்மதா நாயகியாக அறிமுகமாகிறார். பஞ்சாபி திரையுலகில் ஜிப்பி கிரேவல் மிகவும் புகழ் பெற்றவராம். இப்படத்தை ஸ்மீப் காங் இயக்குகிறார். இவர்கள் அனைவருக்குமே இதுதான் முதல் இந்திப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிந்தாவின் மகளான நர்மதா லண்டன் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். கோவிந்தா “கூலி நம்பர் 1, ஹீரோ நம்பர் 1, பார்ட்னர்” போன்ற நகைச்சுவைப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இவருடைய மகள் அறிமுகமாகும் படமும் ஒரு நகைச்சுவைப் படமாகத்தான் உருவாகும் எனத் தெரிகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் ஆரம்பமாக உள்ளது. தற்போது இந்திப் படத்தில் நடிப்பதற்கான பயிற்சியை நர்மதா எடுத்து வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி