செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!…

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!…

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா சார்பில் அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு!… post thumbnail image
புதுடெல்லி:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் வருகிற 23ம் தேதி முதல் ஆகஸ்டு 3ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 224 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.இதில் 7 மாற்றுத் திறனாளி வீரர்களும் அடங்குவார்கள். 90 அதிகாரிகளும் அணியினருடன் செல்கிறார்கள்.

இதற்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்து இருக்கிறது. 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் மொத்தம் 495 வீரர்-வீராங்கனைகள் இடம் பெற்றனர்.அதன் பிறகு 2-வது பெரிய இந்திய அணி இது தான். காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 17 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு 261 பதக்கங்கள் அளிக்கப்பட இருக்கின்றன.

நெட்பால், ரக்பி, டிரையத்லான் தவிர அனைத்து போட்டிகளிலும் இந்தியா கலந்து கொள்கிறது. மாற்று திறனாளி வீரர்-வீராங்கனைகளுக்கு தனியாக போட்டி நடைபெறும்.அவர்களுக்கு மொத்தம் 5 வகையான போட்டிகளில் 22 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. டெல்லியில் நடந்த (2010) காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய அணி 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி