செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் உத்தமவில்லன் படத்தில் புது வேடத்தில் நடிக்கும் கமல்…!

உத்தமவில்லன் படத்தில் புது வேடத்தில் நடிக்கும் கமல்…!

உத்தமவில்லன் படத்தில் புது வேடத்தில் நடிக்கும் கமல்…! post thumbnail image
கமல் விஸ்வரூபம் 2 படத்தை முடித்து விட்டு உத்தமவில்லன் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கின்றனர். ஜெய்ராமும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காமெடி, ஆக்ஷன் படமாக தயாராகிறது. இதன் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

அது திருப்தியாக இல்லாததால் மீண்டும் புது டிரெய்லரை தயார் செய்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உத்தம வில்லன் படத்தில் கமல் நடிக்கும் கெட்டப் வெளியாகியுள்ளது. தாடி மற்றும் வித்தியாசமான தலை முடியுடன் இதில் தோன்றுகிறார். இப்படத்தில் காமெடி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி