செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!…

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!…

அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு ரூ.2¼ கோடி அபராதம்!… post thumbnail image
ரியோடி ஜெனீரோ:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அர்ஜென்டினா அணிக்கு ரூ.2¼ கோடியை சர்வதேச கால்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அபராதமாக விதித்துள்ளது.ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பாகவும் சம்பந்தப்பட்ட அணியை சேர்ந்த வீரர்கள் பேட்டி கொடுக்க வேண்டும்.

போட்டியை எதிர்கொள்ள எப்படி தயாராகிறார்கள்? வியூகங்கள் என்ன? உள்ளிட்ட விஷயங்களை ரசிகர்களும் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இந்த ஏற்பாட்டை கால்பந்து சங்கம் செய்கிறது.
ஆனால் நைஜீரியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டங்களுக்கு முன்பாக பேட்டி அளிப்பதற்கு வீரர்களை அர்ஜென்டினா நிர்வாகம் அனுப்பவில்லை.

அந்த அணியின் பயிற்சியாளர் அலெஜான்ட்ரோ சபெல்லா மட்டுமே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து ஊடக மற்றும் மார்க்கெட்டிங் விதிமுறைகளை மீறியதற்காக இவ்வளவு பெரிய தொகையை அர்ஜென்டினாவுக்கு அபராதமாக சர்வதேச கால்பந்து சங்கம் விதித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி