நயன்தாரா வழியில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை நயன்தாரா கேரளாவைச்சேர்ந்த கிறிஸ்தவ பெண். பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறிய அவர், இப்போதும் இந்துவாகவே இருக்கிறார். அதனால் தான் படப்பிடிப்புகளுக்கு எந்த ஊர்களுக்கு சென்றாலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்வதை வழக்கமாக்க கொண்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து இப்போது ஸ்ருதிஹாசனும் இந்தியா முழுக்க எங்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் அங்குள்ள கோயில்களுக்கு சென்று பக்திபரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதோடு அங்குள்ள கோயில் குருக்களிடம் அந்த கோயில்களின் தல வரலாறு பற்றியும் கேட்டறிந்து கொள்கிறார்.
தற்போது விஷாலுடன் பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதி, படப்பிடிப்புகளுக்கு சென்ற ஊர்களில் முகாமிட்டிருந்தபோது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில்களாக தரிசனம் செய்து வந்தாராம். அப்போது அங்குள்ள ரசிகர்கள், உங்க அப்பா கமலுக்கு சாமி கும்பிடும் பழக்கம் இல்லையே. உங்களுக்கு மட்டும் எப்படி வந்தது? என்று கேட்டார்களாம்.

அதற்கு, அப்பா நாத்திகவாதிதான். என்றபோதும், எங்களது விருப்பங்களுக்கு அவர் தடைபோடுவதில்லை. அந்த வகையில் என் அம்மாவைப்போன்று நானும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவள். அதிலும் சமீபகாலமாக எந்த ஊர்களுக்கு சென்றாலும் அங்குள்ள கோயில்களை தேடி எனது கால்கள் தானாக செல்கிறது. அந்த அளவுக்கு நாத்திகவாதியின் மகளான நான் ஆத்திகவாதியாகி விட்டேன் என்று பதில் கொடுத்தாராம் ஸ்ருதிஹாசன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: