16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு!…

விளம்பரங்கள்

திருவனந்தபுரம்:-சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைகளுக்காக வருகிற 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி கோவிலில் நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றுகிறார்.

தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும். மறுநாள் 17ம் தேதி முதல் சுவாமி அய்யப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.21ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதன் பிறகு நிறைபுத்தரிசி பூஜையை யொட்டி வருகிற 30ம் தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: