செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…

மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…

மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!… post thumbnail image
மும்பை:-மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் போக்குவரத்து மற்றும் மின்சார ரெயில் சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.கடும் மழை காரணமாக தாழ்வான பகுதியான தாதர், பரேல், சியோன், குர்லா, காட்கோபார் மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு நிலைமை விரைவில் சரியாகும் என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், முழுவீச்சில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 128 மோட்டார் பம்ப் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.மழை காரணமாக சென்டிரல் ரெயில்வே- துறைமுகம் மார்க்கத்தில் தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் குர்லா, சுனாபத்தி, பந்தப், டாக்யார்டு மற்றும சியோன் ஆகிய பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ரெயில் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்து செல்கிறது.

மும்பையில் மீண்டும பருவமழை புத்துயிர் பெற்றுள்ளது. அடுத்து 48 மணி நேரம் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மட்டுமல்லாது கொங்கன் மண்டலம் முழுவதும் மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இன்று காலை நிலவரப்படி கொலபா பகுதியில் 101 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி