செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் இணையும் அஜீத், சிறுத்தை சிவா!…

மீண்டும் இணையும் அஜீத், சிறுத்தை சிவா!…

மீண்டும் இணையும் அஜீத், சிறுத்தை சிவா!… post thumbnail image
சென்னை:-அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் சிவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க அஜீத் விருப்பம் கொண்டிருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும்படி கூறியிருந்தார் அஜீத். தற்போது ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்ட சிவா அதனை அஜீத்திடம் காட்டி ஒகே வாங்கியிருப்பது தான் லேட்டஸ்ட் தகவல்.

தற்போது கௌதம் மேனன் படத்தில் நடித்து வரும் அஜீத். அதை முடித்த உடன் மீண்டும் சிவாவுடன் இணைவது உறுதியாகி இருக்கிறது. அஜீத், சிவா தவிர வேறெதுவும் முடிவாகவில்லை. வீரம் படத்தின் இந்தி ஸ்கிரிப்டை முடித்துள்ள சிவா. அதில் அஜீத் கேரக்டரில் நடிக்க சல்மான்கானை அணுகி உள்ளார். அஜீத்தின் தமிழ் படத்தை முடித்துவிட்டு அதற்கு பிறகு வீரம் இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று சிவா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி