செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…

நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…

நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!… post thumbnail image
சென்னை:-சிம்புதனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது. அஜீத்விஜய் படங்களுக்கு இடையே போட்டி நடப்பது போன்று, சிம்புவும், தனுசும் போட்டிக்கோதாவில் குதித்தனர்.

அதோடு, பேட்டிகளிலும் மறைமுகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வந்தனர். ஆனால், பின்னர் மார்க்கெட்டில் சூர்யா, ஆர்யா,விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று ஏராளமான நடிகர்கள் என்ட்ரி ஆனதால், அவர்களுக்கிடையே இருந்து வந்த போட்டி மனநிலை மாறியது. இருவரும் மீண்டும் மேடைகளில் நண்பர்களாக தோள் போட்டுக்கொணடு ஒரே மைக்கில் மாறி மாறி பேசத் தொடங்கினர்.

இந்நிலையில், தங்களது நட்பை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், தான் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில், சிம்பு நடித்துள்ள வாலு படத்தின் ட்ரெய்லரை இணைத்து வெளியிடுகிறாராம் தனுஷ். முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் தனுஷின் அழைப்பின் பேரில் சென்று பார்த்த சிம்பு, அவரது நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறாராம். நண்பனின் இந்த வெளிப்படையான பாராட்டில் உருகிப்போய் இருக்கிறாராம் தனுஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி