செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் கண்டுபிடிப்பு!…

அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் கண்டுபிடிப்பு!…

அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் கண்டுபிடிப்பு!… post thumbnail image
லண்டன்:-மிகவும் கொடிய நோய்த்தொற்றான பெரியம்மை கடந்த 1980களில் இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. மனிதனைத் தாக்கும் நோய்க்கிருமிகளில் இதுவரை இந்த தொற்று ஒன்று மட்டுமே முழுவதுமாக நீக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதுமுதல் ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் மிகுந்த பாதுகாப்பு கொண்ட இரு ஆய்வகங்களில் மட்டும் பெரியம்மை வைரஸ் குறித்த ஆய்வுகளும், தடுப்பூசி மேம்பாடுகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றிலுமே கூர்ந்த கண்காணிப்பையும், நெருங்கிய மேற்பார்வை நடவடிக்கைகளையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதியன்று வாஷிங்டனில் உள்ள என்ஐஹெச் பெதெஸ்டா வளாகத்தினுள் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆய்வகத்தின் அலமாரி ஒன்றில் பெரியம்மை வைரஸ் அடங்கிய ஆறு குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த குப்பிகள் அனைத்தும் உறைந்த, உலர்ந்த மற்றும் சீலிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. 1950ஆம் ஆண்டினை ஒட்டிய மாதிரிகளாக இவை இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பும், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க மையமும் தங்களது கவலைகளை வெளியிட்டுள்ளன. எனினும், இந்த குப்பிகளால் பணியாளர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று உறுதியளித்துள்ள நோய்த் தடுப்பு மையம், இந்த குப்பிகள் மேலும் சில ஆய்வுகளுக்காக கடந்த 7ம் தேதியன்று பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டது. ஆய்வுப் பரிசோதனைகள் முடிந்ததும் உலக சுகாதாரக் கழகத்தின் மேற்பார்வையில் இவை யாவும் அழிக்கப்பட்டுவிடும் என்றும் இம்மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி