செய்திகள்,திரையுலகம் 10.5 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…

10.5 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!…

10.5 கோடி வசூல் செய்த முண்டாசுபட்டி!… post thumbnail image
சென்னை:-கடந்த மாதம் வெளியான படங்களில் வசூல் ரீதியில் வெற்றியடைந்த படம் என முண்டாசுப்பட்டி.சி.வி.குமாரின் தயாரிப்பில் வெளி வந்த படம் இது. ராம் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி படம் திரைப்படமாவதற்கு முன் குறும்படமாக தயாரிக்கப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

முண்டாசுப்பட்டி குறும்படத்தைப் பார்த்து இம்ப்ரஸ்ஸான சி.வி.குமார் அதை திரைப்படமாக தயாரிக்க முன் வந்தார். அக்குறும்படத்தில் ஹீரோவாக நடித்தது காளி வெங்கட். அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ என்ற பயத்தில் விஷ்ணுவை ஹீரோவாக்கினர். குறம்படத்தில் ஹீரோவாக நடித்த காளி வெங்கட்டை காமெடியனாக அந்தப் படத்தில் நடிக்க வைத்தனர்.

முண்டாசுப்பட்டி வெளியானபோது சில தினங்கள் வரை தியேட்டர்களில் கூட்டமில்லை. அதன் பிறகு படம் பிக்கப்பாகி பெரும் வெற்றியடைந்தது. இதுவரை 25 நாட்களில் 10.5 கோடி வசூல் செய்திருக்கிறது. எனவே முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இருக்கிறார் சி.வி.குமார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி