செய்திகள்,திரையுலகம் கமலுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா!…

கமலுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா!…

கமலுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் சூர்யா, இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சமந்தா ஹீரோயின். மும்பையை மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

டீசர் வெளியான இரண்டு நாட்களில் சுமார் 10 லட்சம் பேரை இதனை பார்த்துள்ளனர். இதை ஒரு விழாவாக எடுத்து கொண்டாடியுள்ளனர் அஞ்சான் படக்குழுவினர். ரசிகர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் சூர்யா, லிங்குசாமி, தனஞ்செயன் உள்ளிட்ட படக்குழுவினர்.விழாவில், அஞ்சான் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது என்று கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த படக்குழுவினர், அஞ்சான் ஆடியோ ரிலீஸ் இருமுறை தள்ளிப்போய் உள்ளது.

கமல் சாருக்காக தான் வெயிட் பண்றோம். படத்தின் ஆடியோவை அவர் தான் வெளியிட உள்ளார். ஆனால் அவர் உத்தமவில்லன் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவரால் டேட் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் ஜூலை 22ம் தேதி அவர் பங்கேற்பதாக சொல்லியிருக்கிறார், அதனால் அஞ்சான் படத்தை ஆடியோவை அன்று வெளியிடலாம் என்று எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி