செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் விரைவில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் (இரண்டாம் பாகம்) வெளியீடு…!

விரைவில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் (இரண்டாம் பாகம்) வெளியீடு…!

விரைவில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் (இரண்டாம் பாகம்) வெளியீடு…! post thumbnail image
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடையும் படங்கள் இரண்டாம் பாகமாக எடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், அட்டக்கத்தி நந்திதா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். காளி, ராமதாஸ் ஆகியோர் காமெடியில் கலக்கியிருந்தனர். முழுக்க, முழுக்க காமெடி படமாகவும், வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்த இப்படத்தை குறும்பட இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார்.

இப்படம் திரைக்கு வந்த சில நாட்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்தது. இதனாலேயே, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தைரியமாக எடுக்க தயாரிப்பாளர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குவது, நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரத்தை கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி