செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…

பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…

பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்திருக்காத சினிமா நட்சத்திரங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதிலெல்லாம் நாட்டம் இல்லாத ரஜினியே, கோச்சடையான் பட வெளியீட்டின்போது டுவிட்டரில் இணைந்தார். விஜய் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் டுவிட்டரில் ஒரு ஐடியை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவும் பேஸ்புக், டுவிட்டரில் விரைவில் இணைகிறார்.

பேஸ்புக், டுவிட்டரில் சூர்யா இல்லை என்றாலும் அவரது பெயரில் ஏராளமான போலி கணக்குகள் புழக்கத்தில் உள்ளன. அதை எல்லாம் சூர்யாவின் உண்மையான கணக்கு என்று நம்பி, அவரது ரசிகர்கள் பாலோ பண்ணி வருகிறார்களாம். இப்படிப்பட்ட போலிகளை ஒழிக்கவே, தானே பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு தொடங்க முடிவு செய்திருக்கிறாராம் சூர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி