செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!…

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் அஞ்சான் கேம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதை முன்னிட்டு அப்படத்துக்கான விளம்பரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தாலும், அஞ்சான் படத்தின் முழு உரிமையையும் யுடிவி நிறுவனம் வாங்கி விட்டது. எனவே விளம்பர உத்திகளை யுடிவி நிறுவனமே வகுத்து வருகிறது.

முதல் கட்டமாக அஞ்சான் படத்தின் டீசர் சமீபத்தில் யுடியூபில் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான சில தினங்களிலேயே 11 லட்சம் பேர் யுடியூபில் அஞ்சான் டீசரை கண்டு களித்திருக்கிறார்களாம். இதையே படத்தின் வெற்றியாகக் கருதி சக்சஸ்மீட் வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டது அஞ்சான் டீம். டீசருக்கு சக்சஸ் மீட் வைத்தது திரையுலகில் கடும் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது.

இப்படியோ போனால் படத்துக்கு பூஜை போட்ட அன்றே சக்சஸ் மீட் வைப்பார்கள் போலிருக்கிறதே என்று நக்கலாக கமெண்ட் அடிக்கின்றனர் திரையுலகினர்.
அடுத்த கட்டமாக, அஞ்சான் படத்தின் விளம்பரத்துக்காக ஆண்ட்ராய்டில் அஞ்சான் கேம் தயாராகி வருகிறதாம். சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று இந்த அஞ்சான் கேமை வெளியிட இருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி