செய்திகள்,திரையுலகம் இரண்டு நாளில் 11 லட்சம் பேர் பார்த்த ‘அஞ்சான்’ பட டீஸர்!…

இரண்டு நாளில் 11 லட்சம் பேர் பார்த்த ‘அஞ்சான்’ பட டீஸர்!…

இரண்டு நாளில் 11 லட்சம் பேர் பார்த்த ‘அஞ்சான்’ பட டீஸர்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா மிகவும் எதிர்பார்த்து நடித்துள்ள படம் ‘அஞ்சான்‘. லிங்குசாமியின் இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சமந்தா நடித்திருக்கும் முதல் படம். இப்படத்தின் ஒரு நிமிட டீஸர் ஒன்று கடந்த சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாட்களிலேயே அந்த டீஸரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி‘ டிரைலர் கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டது. அதை இதுவரை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சமீப காலத்தில் வெளியான டிரைலர் அல்லது டீஸரில் குறைந்த நாட்களில் அதிகம் பேர் பார்த்த டீஸராக அஞ்சான் படம் அமைந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி