அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…

பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…

பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, ரெயில்வே துறைக்கான அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களை நேற்று தொடங்கி வைத்தார். ரெயில்வே துறைக்கான பேஸ்புக் பக்கமும், டுவிட்டர் கணக்கும் நேற்று தொடங்கப்பட்டது.

இது குறித்து மந்திரி சதானந்த கவுடா கூறும்போது, ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பட்ஜெட் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த சமூக வலைதளங்களில் காணலாம் என்றும் அனைத்து துறைகளும் தகவல் தொழில்நுட்ப மயமாக மாற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் யோசனைப்படியே இந்த முயற்சி எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 022-4501555 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் ரெயில்வேக்கான பட்ஜெட் தகவலை கேட்டறியலாம் என்றார். அதுமட்டுமின்றி ரெயில்வே தொடர்பான தகவல்களை அறியும் 139 என்ற எண் இனி இலவச சேவையாக வழங்கப்பட இருக்கிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி