அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பாரதிய ஜனதா தலைவராக அமித்ஷா நாளை தேர்வு!…

பாரதிய ஜனதா தலைவராக அமித்ஷா நாளை தேர்வு!…

பாரதிய ஜனதா தலைவராக அமித்ஷா நாளை தேர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-பாரதிய ஜனதா தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று இருக்கிறார். இதனால் பா.ஜனதா தலைவர் பதவி இன்னும் காலியாக இருக்கிறது.பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றியது.

இதற்கு மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், குஜராத் முன்னாள் மந்திரியுமான அமித்ஷா தான் காரணம். இதனால் அவரை பா.ஜனதா தலைவராக நியமிக்க முன்னணி தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.ஜே.பி. நந்தா மற்றும் ஓம்பிரகாஷ் மாத்தூர் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தாலும் அமித்ஷாவுக்கு ஒருமித்த ஆதரவு இருக்கிறது.

இதனால் பாரதிய ஜனதா புதிய தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்படுகிறார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் செல்கிறார். அவர் செல்லும் முன்பு பா.ஜனதா உயர்மட்டக்குழு கூட்டம் நாளை முதல் 11–ந் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில்தான் அமித்ஷா தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி